சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக... சேலம் , மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு சேலம் , செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா ( 29.03.2026) இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும் , மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும் ஆய்வுக் கட்டுரையும் வெளியானது. மகிழம் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புத்தக வெளியீட்டு நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்ற...
‘இளமையில் கல்’ · இளமை என்பது வளர்ந்து வரும் இளமைப் பருவமாகும். எனவே இளமைப் பருவத்தில் அறிவு என்னும் செல்வத்தைத் தேடி பெறுதல் வேண்டும். · பசுமையான காலத்தில் பார்வைக்கு அழகும் அதன் இயல்பும் நம் மனதில் மாறாமல் பதியும். அப்பொழுது உலகில் அறிய வேண்டியவற்றை அறிவதற்கு ஏற்ற மன இயல்பு இருக்கும். · வீட்டுக் கவலை, பணப்பிரச்சனை என்று கவலை இல்லாது மாசற்று விளங்கும் பருவம். அக்காலத்தில் கற்க வேண்டியவற்றை தெரிந்து பதியச் செய்து கொள்வதால் அக்கல்வி, அதனால் வரும் நல்லொழுக்கம் நீங்காது முழுப் பயனையும் பெற முடியும். · ‘இளமையில் கல்’ என்ற ஔவையார் கூறிய அறமொழி இளமைப் பருவத்தைக் கற்பதற்கே செலவிடு என்று அறிவுறுத்துகின்றது. · கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், அறச் செல்வம், பொருட்செல்வம் என்று எல்லாவற்றையும் இளமைப் பருவத்தில் பெறுதல் வேண்டும். ”நரைவர...