Skip to main content

Posts

Showing posts from August, 2022

மதுரை சென்ற அனுபவங்களாக...

  மதுரை சென்ற அனுபவங்களாக ...            ‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம் . நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்று வருவோம் . இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம் . இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , புது அனுபவமாகவும் இருந்தது . இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் .               இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில் , ப்ரத்தியங்கரா தேவி , முருகன் கோவில் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மட்டும் தான் சென்றோம் . மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு ம...

தேவலோக மூலிகை வெற்றிலை

  தேவலோக மூலிகை வெற்றிலை           வெற்றிலை ஒரு மங்களகரமான தெய்வீக மூலிகை. கோயில்களிலும், வீடுகளிலும் கொண்டாடப்படும், சுப நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் புனிதக் கலசங்களில் கூட மாவிலையும் வெற்றிலையும் மங்கலப் பொருட்களாக வீற்றிருக்கும். திருமணம் போன்ற புனிதக் காரியங்களில் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.           முதன் முதலாய் நம் வீடுகளுக்கு வரும் விருந்தினரை நன்கு உபசரித்து, விருந்தளித்து, கடைசியில் வெற்றிலையுடன் தாம்பூலம் தந்து, பிரியாவிடை கொடுத்தனுப்பவது நமது பழக்கம்.           மங்களகரத்தின் மறுசொல் வெற்றிலை என்றே சொல்லலாம். வெற்றிலையை தாம்பூலமாக உபயோகிக்கும்போது, அதனுடன் பார்க்கும் சுண்ணாம்பும் சேரும். தாம்பூலம் போடும்போது வெற்றிலையின் காம்பு, நுனி, வெற்றிலையின் நடு நரம்பு ஆகியவற்றை நீக்கியே உபயோகிக்க வேண்டும்.           வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை மெல்லும்போது வாயில் முதலில் ஊறும் நீர் ...

வில்லின் வரலாறு

  வில்லின் வரலாறு         மிதிலையில் சனகன் மாளிகையில் சிவனால் கொடுக்கப்பட்ட வில் இருந்தது. அதை ஒடிக்க முயன்று தோல்வியைத் தழுவியர் பலர். ஆண்டுகள் சில கடந்தும் வில்லை ஒடித்து சீதையை மணப்பாரின்மையால் சனகன் பெருங்கவலையில் ஆழ்ந்தான். நாளும் அவன் வேதனை வளர்ந்து வந்தது. அந்நிலையில்தான் கோசிகன் இராம இலக்குவருடன் சனகன் மாளிகை அடைந்தான். இராமனைக் கண்டதும் சனகன் மனதில் சிறிது நம்பிக்கை தோன்றியது. இச்செய்தியை கம்பர் அழகாக வருணிக்கிறார்.              ”போதக மனையவன் பொலிவு நோக்கியவ்              வேதனை தருகின்ற வில்லை நோக்கித்தன்              மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய              கோதமன் காதலன் கூறன் மேயினான் ”           தக்கன் உமையவளை இகழ்ந்தான். அதனை அறிந்த சிவன் சினம் கொண்டான். தன் கையில் வில்லை ஏந்தினான். வேள்விச்சாலையை நோக்கி விரைந்தான் தக்கன். வேள்விக்குத்...

கங்கை நதி தோன்றிய வரலாறு

  கங்கை நதி தோன்றிய வரலாறு           சகரன் இரகுவம்சத்தில் தோன்றிய அரசன். அவன் அயோத்தியிலிருந்து ஆட்சி செய்து வந்தான். சகரனுக்கு மனைவியர் இருவர். ஒருத்தி விதர்ப்ப நாட்டு அரசன் மகள். இளையவள் காசிபமுனிவருக்கும் விந்தை என்பாளுக்கும் பிறந்தவள். பெயர் சுமதி. விதர்ப்ப நாட்டவள் பெற்ற மகன் அசமஞ்சன் என்று அழைக்கப்பட்டான். சுமதி கருடனுக்குப் பின் பிறந்தவள் என்பர். சுமதி வயிற்றில் தோன்றியது கரு. கருவிலிருந்து தோன்றிய பிண்டம் வெடித்துச் சிதறியது. அறநெறி நிற்கும் அறுபதினாயிரம் மக்கள் தோன்றினர். மூத்தவளுக்குப் பிறந்த அசமஞ்சன் சிறுகுழந்தைகளை எடுத்து ஆற்றிலிட்டுக் கொன்று மகிழ்ந்து வந்தான். அதனை அறிந்த சகரன் அசமஞ்சனை அருங்கானத்திற்கு ஓட்டினான். காட்டை அடைந்த அசமஞ்சன் கடுந்தவம் இயற்றலானான். தன் தவப்பயனால் இறந்த குழந்தைகளை உயிர்ப்பித்தான். சகரன் மக்கள் பதினாயிரவரும் அளவில்லாத ஆற்றல் பெற்று விளங்கினர். தன் மக்களின் வரம்பில் வலிமையைக் கண்டு மகிழ்ந்த சகரன் அசுவமேத யாகம் செய்ய விரும்பினான். அவன் எண்ணம் அறிந்த அமரர் அஞ்சினர். தம் தலைவன் இந்திரனிடம் முறையிட...

சிசுபாலன்

  சிசுபாலன்          ஐவகை வடிவாய் எங்குமாய் நின்ற பங்கயக் கண்ணன் திருமாலைக் காண துருவாச முனிவர் வைகுந்தம் சென்றான். சென்றவனைக் கோயில் வாயில் காப்போரான துவார பாலகர் தடுத்து நிறுத்தினர். தன்னை விலக்கிய அவர்களை நோக்கி, கோயில் வாயில் காவல் ஒழிந்து பூமியில் பிறப்பீராக என்று சாபமிட்டான். துளப மாலையான் முனிவனை எதிர்கொண்டு, துவார பாலகர் சாபம் கடப்பது எந்நாள் என்று கேட்டான். கேட்ட திருமாலுக்கு முனிவன், உன் அன்பராய் எழுமுறை பிறந்து வருதல் அல்லது உன் பகைவராய் மும்முறை தோன்றுதல் ஆகிய இவற்றுள் ஒரு வகையால் சாபம் தீரும் என்றான். உடனே திருமால் துவார பாலகரை நோக்கி, எவ்வழியில் நும் சாபம் கடக்க விரும்புகின்றீர் என வினவினார். துவாரபாலகர் திருமால் திருவடியைத் தொழுது, வான்பிறப்பு ஏழை வேண்டோம். உனக்கு வெம்பகையாய் மும்முறை தோன்றி எம் சாபம் நீங்க விரும்புகின்றோம். திருமால் அவர்கள் வேண்டிய வரம் அருளினான்.           துவாரபாலகர் முதலில் இரணியன், இரணியாக்கதன் என்ற பெயருடன் தோன்றி உலகில் கொடுமை பல செய்து வருங்கால், திருமால்...

துரோணன்

  துரோணன்           வேதங்களில் வல்ல பரத்துவாசன் கங்கைக் கரையில் வேள்வி செய்து கொண்டிருந்தான். கங்கையாற்றில் நீராட வந்தாள் தேவ மங்கை மேனகை. அவளைக் கண்ட முனிவன் அவள் அழகில் மயங்கினாள். ஆசை கொண்டான். அதன் காரணமாக வெளிப்பட்ட வீரியம் துரோண கும்பத்தில் விழுந்தது. கும்பத்தில் தோன்றிய மகன் துரோணன் என்று அழைக்கப்பட்டான். துரோணன் வசிட்ட முனிவனை ஒத்தவன். வேதங்களை ஓதிச் சிறப்புப் பெற்றான். பரசுராமனிடம் வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்தான்.           துரோணனைப் பற்றி அறிந்த வீடுமன் தூதுவன் ஒருவனை அனுப்பி துரோணனை அத்தினாபுரிக்கு அழைத்தான். கிருபாச்சாரியாருடன் பிறந்த கிருபி என்பவளை மணம் செய்தான். அசுவத்தாமன் என்ற அருமகனைப் பெற்றான். அத்தினாபுரிக்கு அழைத்து வரப்பட்ட துரோணனைத் தக்க முறையில் வரவேற்றான் வீடுமன். துரோணன் தன் வாழ்க்கையில் நடந்ததொரு நிகழ்ச்சியை வீடுமனிடம் கூறினான்.           பாஞ்சால நாட்டை ஆண்டுவந்தான் துருபதன் என்னும் அரசன். துருபதன் இளமையாக இருந்த ப...

கங்கையின் கதை

  கங்கையின் கதை           நான்முகன், அவையில் தேவர்கள் சூழ வீற்றிருந்தான். அச்சமயம் கங்கைதேவி அந்த அவைக்கு வந்தாள். அவள் அவையினுள் நுழைந்தபொழுது காற்று கடும் வேகத்துடன் வீசியது. அதனால் அவள் ஆடை விலகியது. அவையில் அமர்ந்திருந்த அமரர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டனர். ஆனால் வருணன் மட்டும் கண்களை மூடவில்லை. அவன் பெரு வியப்புடன் கங்கையை உற்று நோக்கினான். அதனை அறிந்தான் நான்முகன். சினம் கொண்ட மலரோன், வருணனை மண்ணுலகில் மனிதனாகப் பிறக்குமாறு சாபம் இட்டான். நாணி நின்ற நங்கையாம் கங்கையை விளித்து, பூமியில் பிறந்து வருணனை மணந்து சில காலம் வாழ்ந்தபின் மீண்டு வருக என்றான்.           வருணன் குருகுலத்தில் சந்தனு என்னும் பெயருடன் தோன்றினான். நாட்டை ஆண்டு வருங்கால் வேட்டையில் நாட்டம் கொண்டான் சந்தனு. ஒருநாள் காடு நோக்கிச் சென்றான். காட்டில் அலைந்து திரிந்து விலங்குகளை வேட்டையாடினான். களைப்பு மிகவே, நீர் பருக விரும்பி கங்கையின் கரையை அடைந்தான். கங்கை அழகிய பெண் வடிவம் எழிலையும் பேரொளியினையும் கண்ட சந்தனு ...

நளாயிணி

  நளாயிணி            திரௌபதி மணத்திற்காக சுயம்வரம் நடந்தது . அங்குக் கூடிய மன்னவர்கள் வானில் திரியும் எரி பன்றியை வீழ்த்தும் வகையறியாது வாடினர் . அதனை விசயன் வீழ்த்தினான் . பாஞ்சாலியின் தந்தை துருபதன் . பாண்டவரைத் தன் மாளிகைக்கு அழைத்துச் சென்றான் . ஐவரும் பாஞ்சாலியை மனைவியாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியதைக் கேட்டுத் திகைத்தான் துருபதன் . பாஞ்சாலன் அவைக்கு வந்த வியாச முனிவன் துருபதன் திகைப்பைப் போக்கும் பொருட்டு நளாயிணி வரலாற்றைக் கூறினான் .           கனவில் தோன்றி காரிகையாம் பாஞ்சாலி பழம் பிறப்பில் நளாயணி என்னும் பெயருடன் விளங்கினாள் . மௌத்கல்யன் அவள் கணவனாக விளங்கினான் . மௌத்கல்யன் தன் மனைவியின் கற்பின் உறுதியைச் சோதித்து அறிய விரும்பினான் . கிழவனாகவும் , கொடிய தொழு நோயனாகவும் தன்னைக் காட்டிக் கொண்டு நளாயிணியைத் துன்பம் செய்தான் . கற்பில் வழாத அப்பெண் எல்லாத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டாள் . கணவன் உண்டபின் எஞ்சிய சோற்றில் அவன் விரல் அழுகி விழவும் அருவருப்புக் கொள்ளாது உண்பாள் அவள் . ...

குந்தி தேவி

  குந்தி தேவி          சூரன் என்பவன் யது குலத்தில் தோன்றியவன். அவன் மகள் பிரதை என்னும் பெயரினள். சூரனுடைய அத்தை மகன் குந்திபோசன். குந்திபோசனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, சூரன் தன் மகள் பிரதையைக் குந்திபோசனுக்கு அளித்தான். குந்திபோசனிடம் வளர்ந்து வந்த்தால் பிரதைக் குந்தி என்று அழைக்கப்பட்டாள்.           ஒருநாள் துருவாச முனிவன் குந்தி போசனைக் காண வந்தான். கழங்கு, அம்மானை, ஆடல், ஊசல் முதலிய விளையாட்டுக்களைத் துறந்தும் தன் தோழியரை மறந்தும் குந்தி, வந்த முனிவனுக்குச் சிறு குறையுமின்றிப் பணிவிடை செய்து வந்தாள். தன் அறிவுத்திறனால் முனிவன் முனியாது யாவற்றையும் செவ்வனே செய்து வந்ததைக் கண்டு   முனிவன் மகிழ்ச்சியடைந்தான். துருவாசன் தனக்குப் பணிசெய்த குந்திக்கு அரியதொரு வரம் அருளினான். ” தெரிவை கேள் எனச் செவிப்படுத்து ஒரு மறை தேவரில் யார் யாரைக் கருதி நீ வரவழைத்தனை அவரவர் நின் கரம் சேர்வர். தம்மை ஒப்பதோர் மகவையும் தருகுவர் ” என்று மறையவன் மந்திரம் சொன்னான்.       ...

அகலிகை

  அகலிகை        வச்சிரப்படையுடைய இந்திரன் கௌதம முனிவன் மனைவியான அகலிகையின் அழகைக் கண்டான். அவன் உள்ளத்தில் மோகவெறி மூண்டது. எப்படியும் அவளை அடைய உறுதி கொண்டான். அகலிகை தனித்திருக்கும் காலத்தை எதிர்பார்த்தான். அவன் நினைத்தவாறு காலம் அமையவில்லை. சூழ்ச்சியொன்று செய்து முனிவனை வெளியில் செல்லச் செய்தான்.(கௌதம முனிவன் கோழி கூவியதும் எழுந்து நீராடச் செல்லும் பழக்கம் உடையான் என்பதைத் தேவர்கோன் அறிந்தான். நள்ளிரவில் கோழிபோல் கூவினான். ஒலி கேட்ட முனிவன் வெளியில் சென்றான். இந்திரன் உட்புகுந்தான் என்பர்.) இந்திரன் பொய்யில்லா உள்ளமுடைய கௌதமன் வடிவத்தைக் கொண்டான். ஆசிரமத்தினுட் புக்கான். அகலிகையுடன் காம இன்பம் துய்த்தான். (தன்னைக் கூடியவன் தன் கணவன் அல்லன் இந்திரனே என்பதை அறிந்தாள் அகலிகை. ஆயினும் இந்திரன் செயலுக்கு இணங்கி அகலிகை மகிழ்ந்திருப்பதாக முதல் நூல் கூறுவதைக் கம்பர் நுட்பமாக உணர்த்துகின்றார்). துய்த்த பொழுது ‘உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் தக்கதன்று என்னத் தேறாள் தாழ்ந்தனள் இருந்தாள்’ வெளியில் சென்ற முனிவன் சிறிது நேரத்தில் பொழுது புலரவில்லை. நள்ளிரவு தான் என்பதை அற...

மலர்களினால் பெயர் பெற்ற தலப்பெயர்கள்

  மலர்களினால் பெயர் பெற்ற தலப்பெயர்கள்           மலர்களின் சிறப்பினாலும் தலங்கள் பெயர் பெறுகின்றன. வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் மலர்கள் தொடர்பாகப் புராணங்கள் பலகதைகளைத் தருகின்றன. இறைவனின் பூசைக்கென்றே தனியாகத் தாமரைக் குளங்கள் பராமரிக்கப்பெற்றன. அவைகளும் மலர்களின் சிறப்பினால் பெயர் பெற்றிருக்கக் கூடும். நீலோற்பலம்           தணிகையில் மலரும் நீலோற்பல மலரைக் கொண்டு அத்தலத்தில் தேவர்களும் முனிவர்களும் வழிபாடியற்றினர், எனத் தணிகைப் புராணம் குறிப்பிடுகிறது. நாள்தோறும் இறைவனுக்கென்று மலரும் நீலோற்பல மலரின் பெருமைக் குறித்து அத்தலம் காவித்தடவரை, நிலவரை, நீலவிலங்கல், அல்லகாத்திரி, உற்பலவரை, காவியத்திரி, குவளைக்கிரி, காவியங்கிரி என்ற பெயர்களைப் பெற்றதாகத் தணிகைப்புராணம் பாடுகிறது. செவ்வந்திப்பூ           சரபமுனிவர் தாயுமானவரைச் செவ்வந்திப் போதினால் வழிபட்டமையால் அத்தலம் செவ்வந்திபுரம் என்றாயிற்று எனச் செவ்வந்திப் புராணம் விவரிக்கின்றது. முல்லை ...

மாவலி மன்னன்

  மாவலி மன்னன்            இராமாயணத்தில் நான்காவதாக எடுத்தாளப்படும் கிளைக் கதை. கோசிகனுடன் தொடர்ந்து சென்ற இராம இலக்குவர் வளம் கொழிக்கும் சோலை ஒன்றைக் கண்டார். உள்ளத்தைக் கவர்ந்த அச்சோலையின் தன்மையினைப் பற்றி அறிய விரும்பினர் இருவரும். கோசிகன் தான் வேள்வி செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம். காசிப முனிவன் விரதம் மேற்கொண்டு சித்திப் பெற்ற இடம். எனவே சித்தாச்சிரமம் என்றழைக்கப்பட்டது. அதன் சிறப்பினைக் கோசிகன் கூறினான். மாவலி மன்னன்            கொண்டானிற் சிறந்த தெய்வமில்லை. என்று எண்ணும் குலமகள் சிந்தைபோல் தூய்மை நிறைந்தது சோலை. அச்சோலையில் திருமால் நூறு ஊழிக்காலம் இருந்து தவம் செய்தான்.           திருமால் சோலையிலிருந்து தவஞ்செய்து கொண்டிருந்த காலத்தில் மாவலி என்னும் பெயருடைய அசுரர்க்கு அரசன் வாழ்ந்தான். அவ்வசுரன் தன் ஆற்றலால் வையகத்தையும் வானகத்தையும் வெற்றி கொண்டு கைப்பற்றிக் கொண்டான். மாவலி தெளிந்த அறிவுடையவன். வானவரும் செய்ய முடியாப் பெ...

உடும்பு

  உடும்பு           உடும்பு ஊர்வன இனத்தைச் சேர்ந்தது. ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடைக்குக் குறைவில்லாமல் ஐந்து கிலோ வரையிலும் கிடைப்பன. இவை பெரும்பாலும் வரப்போரங்களின் வளைகளிலும், திடல் திட்டுகளில் உள்ள வளைகளிலும் வாழும் தன்மையுடையன. மரங்களிலும் தங்கும் தன்மை கொண்டன. இவற்றைப் பிடிப்பது மிகவும் எளிதல்ல. இந்த உடும்புகள் மனிதர்களைக் கண்டு அவ்வளவாக அச்சம் கொள்வதில்லை. நின்று திரும்பிப் பார்க்கும் இயல்பு கொண்டது. அந்த நேரங்களில் அதன்மீது துணி வீசினால் அந்த துணிக்குள்ளேயே சிக்கிக் கொள்ளும். அது தங்கும் வளைகளைக் கண்டறிந்து மண்ணைக் கிளறிப் பிடிப்பதும் உண்டு. எவ்வாறு இருந்தாலும் உடும்பைப் பிடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பிடிப்பவர்களைக் கவ்விப் பிடித்துக் கொள்ளும். இரத்தத்தை உறிஞ்சிவிடும். அதன் பிடியில் இருந்து விடுபடுவதும் எளிதல்ல. அதனால்தான் ‘ உடும்புப்பிடி’ என்ற சொல்லாடல் இருக்கிறது. உடும்பின் பயன்கள் ·         உடும்புகளின் மேல் தோல் காத்திரமானது. பிரமிப்பை வெளிப்படுத்தும் ‘கு...

தமிழ் சமூகத்தின் உணவுப் பரிமாணங்கள்

  தமிழ் சமூகத்தின் உணவுப் பரிமாணங்கள்           உணவு பற்றிய தமிழ்ச் சமூகத்தின் அறிதிறன் பார்வை, நோக்குநிலை, அர்த்தப்படுத்துதல் போன்ற பரிமாணங்கள் யாவும் சமூகம், பண்பாடு, பிரபஞ்சம், தேவகணம், உள்ளிட்ட அத்தனையையும் ஊடுருவிச் செல்கின்றன. ‘சூடு, குளிர்ச்சி’ என்ற இருபெரும் எதிரிணை மண்ணியல் கூறுகளையும், உடலியல் கூறுகளையும் இணைக்கின்றன. ‘பித்தம், வாயு, கபம் ’ எனும் மூன்று கூறுகள் உணவினை உடற்கூறுகளோடும் நோயியல் கூறுகளோடும் ஒருங்கிணைக்கின்றன. ‘இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு, கசப்பு’ என்னும் ஆறு புலணுர்வு கூறுகள் உடல்சார்ந்தும் உணர்வு சார்ந்தும் ஒருங்கிணைக்கின்றன. உணவு உணர்வுகளையும், உணர்வுகள் மனிதனின் குணாதியங்களையும் நிர்ணயிக்கின்றன.           சாத்விகம், ராசதம், தாமசம் ஆகிய மூன்றும் உணவு வழி அமையும் குணாதிசயங்களாகக் கருத்தினம் பெற்றுள்ளன. ஒரு வேளை உண்பவர் யோகி, இரு வேளை உண்பவர் போகி ( வாழ்வை அனுபவிப்பவன்), மூன்று வேளை உண்பவர் ரோகி (நோயாளி), எனும் நிலையில் உணவை மையப்படுத்தி மனித...

பண்டைத் தமிழர்களின் வழிபாட்டு வகைகளும் – உணவு முறைகளும்

  பண்டைத் தமிழர்களின்   வழிபாட்டு வகைகளும் – உணவு முறைகளும்           பண்டைத் தமிழர்களின் தொல் சமயம் பல்வேறு வகைகளாக இருந்துள்ளன. ஆவி வழிபாடு, உயிரிப்பாற்றல் வழிபாடு(animatism), கானுறை தெய்வங்கள், மலையுறை தெய்வங்கள், நீருறை தெய்வங்கள், மரத்தில் உறையும் தெய்வங்கள், கந்து ஆகியவற்றின் வழிபாடு, இயற்கை வழிபாடு, எனத் தொல் தமிழரின் வழிபாட்டு முறைகள் பன்முக நிலையில் பரிணமித்துள்ளன. இவற்றோடு பழையோள், காடமர் செல்வி, காடுகிழாள், கொற்றவை என விரிந்தன. பின்னர் நிறுவனச் சமயங்களாக வடிவம் பெற்றன. ஆசீவகம், சாக்தம், கௌமாரம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம் எனத் தமிழர்களின் சமய வாழ்வு தொடர்ந்து மாறி வந்துள்ளது. இதில் தொடர்ச்சியையும் மாற்றத்தையும் காண முடிகிறது. சமயத்தின் செல்வாக்கினை உணவு உள்ளிட்ட பண்பாட்டின் மற்ற கூறுகளில் காண முடிகிறது. ஆக, தமிழர்களின் உணவு முறையானது அதன் நீண்ட நெடிய சமய வரலாற்றைப் போன்றே ஒரு தொடர்ச்சியான மரபைக் கொண்டிருக்கிறது. உணவு முறைகள்         பண்டைத் தமிழர்கள் உணவைப் பல பெயரிட்டு அழைத்...

இலக்கியங்களில் - பசலை நோய்

  இலக்கியங்களில் - பசலை நோய்         தலைவனைப் பிரிந்ததும் தலைவியிடம் தோன்றும் மெய்யின் நிறைவேறுபாடாகிய பசலை உள்ளத்தின் துன்பம் உடலளவில் நிலைமாற்றப் பெறுவதற்கான சான்றாகும். ‘உள்ளம் நோயுற்ற காலத்தில் மேனியில் ஏற்படும் மாறுபாடுகளில் தலையாயதாகத் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது நிற மாற்றத்தையே’ எனக் கூறுவது சரியான மதிப்பீடாகும்.           ”உள்ளுதோறு உள்ளுதோறு உருகிப்             பைஇப் பையப் பசந்தனை பசப்பே” என்ற பாடலில் தோழிக் கூற்றில் உள்ளத்தின் நினைவால் உடலில் பரவும் பசலை கூறப்படுகிறது.           ”பழங்கண் கொண்டு நனிபசந் தனள்” என்னும் தொடரில் பசலையின் காரணமாகிய துன்பமும் துன்பத்தின் விளைவாகிய பசலையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. கண்களிலும் நெற்றியிலும் பசலை படர்தலைப் பற்றி குறிப்புகள் பல உள்ளன. குறுந்தொகை பாடல் ஒன்றில்,           ” மாசுஅறக் கழிஇய யானை போலப்  ...

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...